திருக்குடந்தை ஆராவமுதன்

Aravamudan

இது மிகவும் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசத்திலிருந்தே நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார். திருக்குடந்தையில் சில வைணவர்கள் பிரபந்ததை பாடும் போது கேட்ட அவர், அந்த பாசுரங்களின் தோன்றல் ஆழ்வார் திருநகரி என்பதை உணர்ந்து, அவ்வூர் சென்றடைந்தார். அங்கு மதுரக்கவி ஆழ்வார் வழி வந்த ஒருவரிடமிருந்த கண்ணிநுண் சிறுதாம்பு பெற்றார். அதை பன்னிராயிரம் முறை பாராயணம் செய்த போது நம்மாழ்வார் அவர் முன் தோன்றி நாலாயிர திவ்ய பிரபந்ததை அருளினார்.

ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோயில்

கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்த சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மூலவர் திருநாமம் ஸ்ரீ சாரங்கபாணி ஆகும். ஆனந்தாழ்வார் மேலே உத்தநசாயியை எழுந்தருளியுளார். ஹேமாரிஷி தவ பலனை பெற்ற கோமளவல்லி தாயாரை இங்கு திருமணம் புரிந்தார். இங்குள்ள பிரகாரம் யானை தேர் இழுப்பது போல் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

தாயார் - கோமளவல்லி தாயார்

தீர்த்தம் - ஹேமா புஷ்கரினி, காவிரி, அரசலாறு.

மங்கலாசஸனம்

பெரியாழ்வார் - 173, 177, 188

ஆண்டாள் - 628

திருமழிசையாழ்வார் - 807-812, 2417

திருமங்கையாழ்வார் - 949, 954, 991, 1078, 1202, 1205, 1394, 1526, 1538, 1570, 1606, 1732, 1759, 1853, 1949, 1975, 2010, 2037, 2045, 2068, 2070, 2080, 2672, 2673, 2674

பூதத்தாழ்வார் - 2251, 2278

பேயாழ்வார் - 2311, 2343

நம்மாழ்வார் - 3194 - 3204

மொத்தம் 51 பாசுரங்கள்

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:

 

,e;j jsj;ij M';fpyj;jpy; ghu;gjw;F