திருக்குடந்தை ஆராவமுதன்

Aravamudan

சித்திரை: அட்சய த்ருதியை அன்று 12 கருட சேவை, சைத்ரோத்சவம், சித்திரை திருநட்சத்திரத்தில் திருதேர் உத்ஸவம்.
வைகாசி : வஸந்தோத்ஸவம் ஏழு நாட்களுக்கு பெருமாளுக்கும், இரண்டு நாட்கள் தாயாருக்கும், கடைசி தினத்தன்று பெருமாள் தாயார் சேர்த்தி உட்சவமும் நடைபெறும். பௌர்ணமியில் பெருமாளுக்கு வெள்ளி ரதமும் உண்டு
. ஆடி : ஸ்ரீ ஆண்டாள்க்கு மூன்று நாட்கள் திருவாடிப்பூரம் உட்சவம் நடைபெறும். பெருமாளுக்கு பவித்ரோத்ஸவம், ஏகாதசி, ஜேஷ்தாபிஷேகம் பதினெட்டாம் பெருக்கன்று பெருமாள் அல்லது பாதுகை காவிரிக்கு எழுந்தருளுதல்.
ஆவணி : ஸ்ரீ ஜயந்தி - உறியடி உட்சவம். புரட்டாசி : தாயாருக்கு நவராத்திரி உட்சவம், சரஸ்வதி பூஜை தினத்தன்று பொற்றாமரை பிரடக்ஷணம்.
ஐப்பசி : தீபாவளி உட்சவம், மூலவருக்கு புனுகு காப்பு, ஸ்ரீ லக்ஷ்மிநாராயண சுவாமிக்கு பெருமாள் செய்யும் ஷ்ரார்த்தம்.
. கார்த்திகை : திருக்கார்த்திகை தீப உட்சவம், ஆழ்வாருக்கு அத்யாயனப் பட்டோலை வாசித்தல், ஊஞ்சல் உட்சவம்.
மார்கழி : பகல் பத்து, இராப்பத்து வைகுந்த ஏகாதசி கந்தவர்வக்குடை 15ஆம் சேவை பரமப்பதநாதன் சேவை, நம்மாழ்வார் திருவடி தொழல்.
தை : தாயாருக்கு கனு உட்சவம், அத்யாயன உட்சவம் - 11 நாட்கள், அமாவாசை தினத்தன்று பொற்றாமரை பிரடக்ஷணம், ரத ஸப்தமி.
மாசி : மாசி மகத்தன்று தெப்போத்ஸவம்.
பங்குனி : தாயார் பிரம்மோட்ஸவம், பங்குனி உத்தரத்தன்று தாயார் வெள்ளி ரதத்தில் உட்பிரகாரம் பிரடக்ஷணம், பெருமாள் பொற்றாமரை பிரடக்ஷணம், திருக்கல்யாண உட்சவம் மற்றும் விடையாற்றி உட்சவம்.
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ: